சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதனைப் போலவே மழைக்காலங்களிலும் சாலைகளில் கழிவுநீர் தேங்கும் வழக்கமாகிவிட்டது. இந்த கழிவு நீரால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் பலவித தொற்று நோய்களுக்கு ஆளாகியும் அவதிப்படுகிறார்கள்.

இந்நிலையில் குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தற்போது சென்னை மாநகராட்சி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றம் தொடர்பாக குடிநீர் வாரியத்தின் 044 4567 4567 மற்றும் 1916 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.