சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால் அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் அவ்வாறு செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதாவது அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். வழக்கமாக சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5 கோடி ரூபாய் மட்டுமே சொத்து வரி வசூல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.