சென்னை மக்களே அலெர்ட் ஆகுங்க… இதை செய்தால் ரூ.5000 அபராதம்…. மாநகராட்சி எச்சரிக்கை….!!!

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  செய்தியில், ” பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தரம் பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுபவர்களில் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு ரூ.1,000, பெருமளவு குப்பை  உருவாக்குபவர்களுக்கு ரூ.5,000 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் கட்டுமான மற்றும் இடிபாடு கழிவுகளைக் கொட்டுபவர்களில் 1 டன் வரை கொட்டுபவர்களுக்கு ரூ.2,000, 1 டன்னுக்கு மேல் கொட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம். தோட்டக்கழிவுகள், மரக்கழிவுகளைப் பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கு ரூ.200 அபராதம் .கழிவுநீர்ப் பாதை, கால்வாய் நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம். திடக்கழிவுகளை எரிப்பவர்களில் தனியார் இடங்களுக்கு ரூ.500 அபராதம், பொது இடங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *