
சென்னையில் இருந்து டெல்லிக்கு தினமும் 19 விமான சேவைகளை இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா உட்பட பல்வேறு விமான நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதே போல் தினம்தோறும் டெல்லியில் இருந்தும் 19 ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கூடுதலாக நான்கு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து காலை 7.50 மணி மற்றும் மாலை 3:40 மணிக்கு டெல்லிக்கு விமானம் புறப்படுகிறது. அதேபோல் டெல்லியில் இருந்து பிற்பகல் 2.45 மணி மற்றும் இரவு 10:30 மணிக்கு சென்னைக்கு விமானம் புறப்படுகிறது.