சென்னை சவுகார்பேட்டையில் போலீஸ் எனக்கூறி ரூபாய் 1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்டதில் ரூபாய் 70 லட்சம் மீட்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை சவுகார்பேட்டையில் பட்டப் பகலில் 1 கோடியே 40 லட்சம் ரூபாயுடன் தங்கநகைக்கடை வியாபாரிகள் இருவர் ஆட்டோவில் சென்றபோது, அவர்களிடமிருந்து போலீஸ் என்று கூறி 5 பேர் அந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் சவுகார் பேட்டையில் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடத்தக்கூடிய இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. பின் தான் அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து யானைகவனி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த குற்றவாளிகளை பிடிப்பதற்கு 6 தனிப் படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை செய்தனர். குறிப்பாக அவர்கள் பயன்படுத்திய கார்? அவர்கள் யார் யாரிடம் பேசினார்? எப்படி வந்தார் எனத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இம்ரான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைது செய்து தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் 70 லட்சம் ரூபாயை அவரிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக மேலும் யார் யாருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரம் காவல் தெரிவிக்கிறது. இந்த சம்பவத்தில் முதல் கட்டமாக 70 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர் போலீசார்.. மேலும்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..