சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சமீபத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவின்போது கோமியம் குடித்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் சரியாகும் என்று கூறினார். அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் நேற்று மீண்டும் இது பற்றி விளக்கம் கொடுத்தார். அப்போது தாங்கள் விசேஷ காலத்தின் போது பஞ்சகவியம் சாப்பிடுவதாகவும் அதில் மாட்டு கோமியம் இருப்பதாகவும் மாட்டு கோமியத்தில் ஆரோக்கியம் இருப்பதற்கான சான்றுகள் தன்னிடம் இருப்பதாக கூறினார். இது பற்றி ஆராய்ச்சி கூட மேற்கொள்ள இருப்பதாக கூறினார். அவருடைய பேச்சை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயலாளர் சண்முகமும் காமகோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்று வலியுறுத்துள்ளார்.