சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

சென்னை ஐஐடி சார்பாக தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ ஏ டி அறிமுகம் செய்துள்ள தனிநபர்,தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பில் மாணவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாடங்கள் மற்றும் செயல்முறைகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக மாணவர்களின் தனித் திறன் மற்றும் தலைமை பண்பு மேம்படும்.

இந்த படிப்பில் அனைத்து பொறியியல் மற்றும் இரட்டைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் சேர முடியும். ஐஐடியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் இதனை விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம். இந்த படிப்பை அறிமுகம் செய்யும் முன்மொழிவுக்கு சென்னை ஐஐடியின் ஆட்சி மன்ற குழு அண்மையில் ஒப்புதல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.