சென்னை: இரவில் வெளுத்து வாங்கிய கனமழை…. குஷியில் மக்கள்…..!!!!

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் நேற்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் சூழ்நிலையில் சென்ற சில நாட்களாக ஆங்காங்கே ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வந்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் நேற்றிரவு 9:30 மணியளவிலிருந்து சென்னை எழும்பூர், சென்டிரல், கீழ்ப்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, சர்மா நகர், கொடுங்கையூர், மூலக்கடை, மாதவரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் ஆகிய பெரும்பான்மையான இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான செங்குன்றம், புழல், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் மழைபெய்தது. சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னை வாழ் மக்கள் நீண்டநாட்களுக்கு பின் நேற்று குளுமையை உணர்ந்ததுடன் வெக்கையின்றி மகிழ்ச்சியுடன் இரவில் உறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *