இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு ஜனவரி 14 முதல் 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக வெளியூர்களில் இருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவார்கள்.
4 நாட்கள் பொங்கல் விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்களுக்காக சிறப்பு பஸ்கள் அரசு சார்பில் இயக்கப்படுகின்றன. கடந்த மாதமே இதற்கான முன்பதிவு தொடங்கி விட்ட நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், நாளை முதல் 14ம் தேதி வரை 340 கூடுதல் சிறப்பு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தமல்லி பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.