தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதி நிலங்களினுடைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்று கட்டண விவரங்களை அனைத்து பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டணத்தின் படி சென்னை, கோவை மாநகராட்சி பகுதியில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பானது சதுர அடிக்கு ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல காஞ்சிபுரம், ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு 800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதிப்பை மாற்றி அமைத்திருப்பதன் மூலமாக மதிப்பு குறைவான இடங்களிலும் இனி விலை அதிகரிக்கும்.
இதனால் பொதுமக்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருச்சி,, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் குறைந்தபட்சமாக 700 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை, கரூர், வேலூர், திண்டுக்கல் மாநகராட்சிகளில் 600 ரூபாய். தூத்துக்குடி, தஞ்சாவூர், சிவகங்கை, சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் 500 எனவும், கடலூர் மாநகராட்சியில் 300 எனவும் நிலத்தின் மதிப்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் சதுர அடிக்கும் 300 ரூபாய், பேரூராட்சி பகுதிகளில் சதுர அடிக்கு 200 ரூபாய் ஊராட்சிகளில் 100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் குறைந்தபட்சமாக வருடத்திற்கு இத்தனை கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது