சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் புத்தகக் காட்சி (பபாசி) சென்ற ஜன,.6 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் முதன் முறையாக சர்வதேச புத்தகக் காட்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த சர்வதேச புத்தகக்காட்சியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்தார்.

இன்று முதல் 18 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் பல நாட்டினர் பங்கேற்கின்றனர். அத்துடன் இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழாண்டு பாட நூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி மற்றும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்