சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் நாளை செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நாளை காலை 4 மணி முதல் காலை 9 மணி வரை நேப்பியர் பாலத்தில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ராஜாஜி சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் போர் நினைவுச் சின்னத்திலிருந்து வலது புறம் திரும்பி கொடி மரச்சாலை வழியாக வாலாஜா பாயின்ட் – அண்ணா சாலை – மன்ரோ சிலை – பல்லவன் பாயின்ட் – பெரியார் சிலை – அண்ணா சிலை – இடது புறம் – வாலாஜா சாலை – வலது புறம் – உழைப்பாளர் சிலை வழியாக காமராஜர் சாலை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காமராஜர் சாலையில் இருந்து நேப்பியர் பாலம் வழியாக ராஜாஜி சாலை செல்லும் வாகனங்கள் அனைத்தும் உழைப்பாளர் சிலை – வாலாஜா சாலை – அண்ணா சிலை – அண்ணா சாலை –பெரியார் சிலை – பல்லவன் பாயின்ட் – மன்ரோ சிலை – வாலாஜா பாயின்ட் – கொடி மரச் சாலை – போர் நினைவுச் சின்னம் வழியாக ராஜாஜி சாலை செல்லும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை வாசிகளே நாளை  காமராஜர் சாலை வழியாக செல்பவர்கள் அனைத்தும் இந்த வழியில் செல்லும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *