தமிழகத்தில் சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அடிக்கடி முக்கிய போக்குவரத்து சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பட்சத்தில் காவல்துறையினர் அதனை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்து வருகிறார்கள். அதன்படி தற்போது ஜனவரி 8ஆம் தேதி அதாவது நாளை சென்னை runner’sமாரத்தான் நெடுந்தூர ஓட்டம் அதிகாலை 4 மணிக்கு நேர் பாலத்தில் தொடங்கி 9 மணிக்கு இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகின்றது. இதன் காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் ஆணையர் தாம்பரம் போக்குவரத்து காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து துரைப்பாக்கம் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இடதுப்புறம் திரும்பி செம்மொழி சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதனைப் போலவே ராஜீவ் காந்தி சந்திப்பில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் அனைத்து வாகனங்களும் வலது புற சாலையில் செல்ல வேண்டும் எனவும் மேடவாக்கம் வழியாக சோளிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேளச்சேரி பிரதான சாலை பள்ளிக்கரணை வழியாக செல்ல வேண்டும் எனவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்