சென்னையில் ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதராக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதல்முறையாக சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. அதுவும் சென்னையில் வருகின்ற ஜனவரி மாதம் 16,17,18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தமிழக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.