சென்னை பட்டினம்பாக்கம் ரோகினி கார்டன் பகுதியில் காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து இரு காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜான் ஆல்பர்ட் என்பவர் அங்கு வசித்து வந்துள்ளார். இவர் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மதியம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு 30 லட்சத்திற்கும் மேல் கடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேப்போன்று கடந்த 15 ஆம் தேதி முகமது அலி ஜாவத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் போக்குவரத்து பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். மேலும் அடுத்தடுத்து  இரு போலீசார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.