சென்னையில் இருந்து கிளம்புபவர்களே! பேருந்து புறப்படும் நேரம்…. விவரங்கள் இதோ…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கிய நிலையில் தமிழகத்தில் மே  10 ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு  வெளியே சென்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக இந்நிலையில் நேற்றும், இன்றும் 24 மணி நேரமும் போக்குவரத்து இயங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் இருந்து மார்த்தாண்டத்துக்கு மாலை 6 மணி, நாகர்கோவிலுக்கு மாலை 7, தூத்துக்குடி மாலை 7, செங்கோட்டைக்கு 7.30 மணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்தில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையத்தளம், செல்போன் செயலியில் முன்பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *