சென்னையில் இன்று முதல் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக அயனாவரம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் ஜனவரி 25ஆம் தேதி முதல் 7 நாட்களுக்கு சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. அதன்படி மெட்ரோ ரயில் கட்டுமான பணிக்காக ஆண்டர்சன் சாலை மூடப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து பில்கிங்டன் சாலையில் கொன்னூர் நெடுஞ்சாலை முதல் கான்ஸ்டபிள் சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படுகின்றது. இந்த வழித்தடங்களில் எல்லாம் போக்குவரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குன்னூர் நெடுஞ்சாலையில் இருந்து பில்கிங்டன் சாலை வழியாக பெரம்பூர் நோக்கி செல்வதற்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய வாகனங்கள் குன்னூர் நெடுஞ்சாலையில் நேராகச் சென்ற இடதுப்புறம் திரும்பி டேங்க் பண்ட் சாலை வழியாக செல்லலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது

Leave a Reply