சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண் காவலர்களின் குழந்தைகளுக்கு காப்பகம், திறமையை அங்கீகரித்து ஆண்டுதோறும் விருது, குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு மற்றும் பணியிட மாற்றம், ஆண்டுதோறும் துப்பாக்கிச் சூடும் போட்டி,ஆண்டுதோறும் தேசிய மாநாடு மற்றும் டிஜிபி அலுவலகத்தில் பணி வழிகாட்டு ஆலோசனைக்கு அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு காலை 8 மணிக்கு ரோல் கால் நடத்தப்படும் என ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தார்.

Leave a Reply