சென்னையில் இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் சென்னை சென்ட்ரல் மற்றும் பித்ரகுண்டா இடையே மெமு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இயக்கப்பட உள்ளது. இதனைப் போலவே கோவை மற்றும் பெங்களூரு இடையே ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதன் கிழமை தவிர வாரத்திற்கு ஆறு நாட்கள் உதய் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.