சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத் துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

அதனால் பகுதி ஏழு, 8, 9, 10, 11, 12, பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகின்றது. அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை குடிநீர் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.