சென்னையில் இன்று(ஜூலை 6) முதல் அமல்…. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய செய்தி குறிப்பில், பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும்போது தவறாமல் முக கவசம் அணிந்து சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வெளியில் செல்லும்போது அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதனைப் போலவே பொது இடங்களில் முக கவசம் அணியாத நபர்களுக்கு இன்று முதல் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின் கீழ் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. எனவே ஜூலை 6 இன்று முதல் சென்னையில் முக கவசம் அணியும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *