நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்..
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹாரை 15 கோடி ரூபாய்க்கு கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் காயம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தீபக் சாஹர் விளையாடவில்லை.. அதேபோல் காயம் காரணமாக கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரிலும் தீபக் சாஹர் இடம் பெறவில்லை.. இந்நிலையில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள தீபக்சஹர் 2 பெரிய காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதி பெற்றதால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் 4 முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைலி ஜேமிசன் காயம் காரணமாக விலகி உள்ள நிலையில், தீபக் சாஹர் காயத்திலிருந்து மீண்டு வந்து அணிக்கு விளையாடுவது சென்னை அணி ரசிகர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.