செந்தில் பாலாஜியின் வீட்டில் ஐடி ரெய்டு…. வருமானவரித்துறையினர் அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து கரூர், சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.