அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதயத்தில் அடைப்பு இருந்ததால் நேற்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மூன்று மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார்.

அதன் பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தார்.