செகந்திராபாத் முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. செகந்திராபாத்தில் இருந்து ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும்.

மறு மார்க்கமாக வெள்ளிக்கிழமை ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம்,சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அறந்தாங்கி வழியாக இயக்கப்படும். இதற்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.