தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்து வருவதால் மக்களும் சற்று நிம்மதியாக உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஆன காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.