“சூர்யாவின் திரைப்படங்களில் எனக்கு அந்த திரைப்படம் தான் மிகவும் பிடிக்கும்”…. பேட்டியில் கூறிய கார்த்தி….!!!!!!!

சூர்யாவின் திரைப்படங்களில் தனக்கும் மிகவும் பிடித்த திரைப்படம் குறித்து கார்த்தி பேசியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கார்த்தி. இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை என தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து பிரபல முன்னணி நடிகராக மாறினார். இடையில் சில சருக்கல்களை சந்தித்தாலும் மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து தோழா, தீரன்,கைதி என வெற்றி திரைப்படங்களை கொடுத்தார்.

இவர் நடிப்பில் அண்மையில் விருமன் திரைப்படம் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் கார்த்தி கூறியுள்ளதாவது, சூர்யா பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு பிதாமகன் திரைப்படம் தான் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யா வேற லெவலில் நடித்திருப்பார் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *