சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’…. ரிலீஸ் தேதி மாற்றம்….  ஏமாற்றத்தில் ரசிகர்கள்…..!!!!

சூர்யா நடிப்பில் உருவான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பில்,பாண்டிராஜ் இயக்கத்தில்  உருவாகியிருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம், பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறையாததால், 50 சதவிகித இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் இப்படக்குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் 17 அல்லது 18-ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *