சூப்பர் ஹிட்டான மலையாள படத்தின் ரீமேக்… ராணாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியா?…!!!

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ . இயக்குனர் சாஷி இயக்கிய இந்த படத்தில் பிஜூமேனனும் பிருத்விராஜும் நடித்திருந்தனர் . இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது . இதையடுத்து தென்னிந்திய மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தயாரிப்பாளர் ஆடுகளம் கதிரேசன் வாங்கியுள்ளார் . மேலும் தெலுங்கு ரீமேக்கிற்க்கான உரிமையை தயாரிப்பாளர் சூரியதேவர நாகவம்சி வாங்கியுள்ளார் .

John Abraham to remake 'Ayyappanum Koshiyum' in Hindi - The Hindu

 

இந்த படத்தில் பிஜூமோனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், பிரித்திவிராஜ் நடித்த கோஷி கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர் . இதையடுத்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான அய்யப்பன் மற்றும் கோஷியின் மனைவிகள் கதாபாத்திரத்திற்கு சாய்பல்லவி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சாய் பல்லவி இடமும் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .