சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்பி எடுத்த தெலுங்கு நடிகரின் மகள்… வெளியான கலக்கல் புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

தமிழ் திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது இவர் நடிப்பில் அண்ணாத்த படம் தயாராகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நேற்றுடன் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகளை நிறைவு செய்த நடிகர் ரஜினி இன்று சென்னை திரும்பினார்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற போது ரஜினியுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் . மேலும் அந்த புகைப்படத்தை லட்சுமி மஞ்சு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது ‌ .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *