சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய முக்கிய நடிகர்… வெளியான கலக்கல் புகைப்படம்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் விஸ்வந்த் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கடந்த வருடம் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது. ஆனால் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் விஷ்வந்த் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் நடிகர் விஷ்வந்த் அருகில் இயக்குனர் சிவா, நடிகர் சூரி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.