
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்கி இருந்த நிலையில் அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வரைக்கும் இந்த படம் வசூல் சாதனை புரிந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெய்லர் 2 டீசரை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.