சூப்பர் ஸ்டார் கையால் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை பெற்ற பிரதீப் ரங்கநாதன்…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தையும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகிலும் பிரதீப் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குறித்த அழைப்புகள் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது சிறந்த அறிமுக நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதை தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரதீப் ரங்கநாதனுக்கு வழங்கினார். இது தொடர்பான புகைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான விருது கிடைத்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதோடு பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருக்கிறது.

Leave a Reply