பிரதான் மந்திரி உஜ்வாலா போஜனா என்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் படி கேஸ் அடுப்பு மற்றும் முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கு 18 வயது பூர்த்தி அடைந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிபிஎல் கார்டு, பிபிஎல் பட்டியல் பெயர் அச்சிடுத்தல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி நகல், வயது சான்றிதழ், மொபைல் எண் ஆகியவை தேவைப்படும். இதற்கு விண்ணப்பிக்க முதலில் http://www.pmuy.gov.in என்று அதிகாரப்பூர்வமா தளத்தில் சென்று உஜ்வாலா போஜன 2.0 என்பதை கிளிக் செய்து மொபைல் எண் மற்றும் கேட்கப்படும் அனைத்து விஷயங்களையும் டைப் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.