உலகளவில் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப் செயலி கடந்த புதன்கிழமை ஒரு அறிக்கையில், இந்தியாவில் நேரடியாக பணம் செலுத்துவதற்கு வசதியாக வாட்ஸ்அப் சேவைகளை விரிவுபடுத்தும் என்று அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மெட்டா நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், “மக்கள் மற்றும் வணிகங்களை இணைப்பதில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது.

இனிமேல், பயனர்கள் மற்ற ஆப்களுக்கு செல்லாமல் தாங்கள் விரும்பும் பொருட்களுக்கு நேரடியாக வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தலாம்.” என்று கூறினார்.