இந்தியாவின் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது direct to device-D2d என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை தற்போது வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் இனிவரும் காலங்களில் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசுவதற்கு சிம்கார்டு தேவைப்படாது. அதாவது D2D என்பது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைக்கும் தொழில்நுட்பமாகும்.
யாராவது காடுகளில் சிக்கிக்கொண்டாலோ அல்லது இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டாலும் இந்த புதிய தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சிம் கார்டு இல்லாமலேயே இனி போன் பேசலாம் என்ற புதிய தொழில்நுட்ப சோதனையை பிஎஸ்என்எல் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் இனிவரும் காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.