சூப்பரோ சூப்பர்….. தென் சென்னையின் புது அடையாளம்….. CMDA போட்ட பலே திட்டம்…..!!!

போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையிலும் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டிய பேருந்து நிலையம் கொரோனா தொற்று காரணமாக தாமதமானது. தற்போது பணிகள் வேகமடுத்துள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முடித்து விட திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள கிளாம்பாக்கம் பகுதி வேற லெவலுக்குமாற தொடங்கியுள்ளதும் நிலத்தின் மதிப்பு கிடுகிடுவென உயர ஆரம்பித்துவிட்டது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொழுதிற்கு பல்வேறு வசதிகள் வருவதற்கு வரிசை கட்டி நிற்கின்றனர். பேருந்து நிலையத்தை மையமாக வைத்து சுற்று வட்டார பகுதிகளில் புதிய மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரவும் தமிழக அரசு கணக்கு போட்டு வைத்துள்ளது.

இந்நிலையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மெகா திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதாவது கிளாம்பாக்க பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள 16.90 ஏக்கர் நிலத்தில் பல்லுயிர் மற்றும் தொல்பொருள் விளக்கப் பூங்காவை அமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே கிளாம்பாக்கத்தில் உள்ள 46 ஏக்கர் நிலமானது பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் 2010 சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தை ஒட்டி புதிதாக பேருந்து நிலையம் வர உள்ளதால் எந்த ஒரு சிக்கலும் ஏற்படாத வகையில் சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

அதுமட்டுமில்லாமல் புத்துணர்வு மையங்கள், சமூகம் சார்ந்த செயல்பாடுகள், சுற்றுச்சூழல் வழித்தடங்கள் ஆகியவற்றையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பசுமை மண்டலமாக மிகவும் பாதுகாப்பான முறையில் கிளாம்பாக்கம் பகுதியை கையாள சி.எம்.டி.ஏ விரும்புகிறது. மேலும் மழை நீரால் வெள்ளம், சேதம் ஆகியவை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பினை மறுசுழற்சி உள்ளிட்டவையும் வரவுள்ளது. இவ்வாறு பல்லுயிர் மற்றும் தொல்பொருள் விளக்க பூங்கா அமைக்க அப்பகுதியில் நில அமைப்பு, சூழல், மண் ஆகியவற்றை ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடம் சிஎம்டிஏ சமர்பித்துள்ளது. அடுத்ததாக டெல்லியில் உள்ள தேசிய சின்னங்கள் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று கிடைத்துவிட்டால் பூங்கா கட்டுவதற்கான டெண்டர் கோரப்படும்.