“சூடுபிடிக்கும் 2 ஆவது நாள்” ஏலம்…. போட்டி போடும் அணிகள்…. 2 “இந்திய வீரர்களை” தூக்கிய “குஜராத் டைட்டன்ஸ்”…!!

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆம் நாள் மெகா ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்திய வீரர்கள் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் 15 ஆவது சீசனுக்கான 2 ஆவது மெகா ஏலம் இன்று பெங்களூரிலுள்ள ஐடிசி கார்டீனியா விடுதியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 10 அணிகளும் 590 வீரர்களும் பங்கேற்றுள்ளார்கள். இதில் 147 இந்திய வீரர்கள் உட்பட 217 பேர் ஏலம் விடப்படவுள்ளார்கள்.

அவ்வாறு ஏலத்தில் விடப்படும் வீரர்களை ஒவ்வொரு அணியும் போட்டி போட்டு எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்திய வீரர்களான ஜெயந்த் யாதவை 1.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இந்திய வீரரான விஜய் ஷங்கரை 1.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *