சுவையான வாழைப்பூ கூட்டு குழம்பு… செய்து பாருங்கள் …!!!

வாழைப்பூ கூட்டு குழம்பு செய்ய தேவையான பொருள்கள் :

வாழைப்பூ                    –  5 மடல்
தேங்காய் துருவல்  –  4 ஸ்பூன்
துவரம் பருப்பு            –   1 கப்
பூண்டு                            –  10 பல்
சின்ன வெங்காயம் – 15
மிளகாய்                       –  3
தக்காளி                        –  3
சீரகம்                             –  2 ஸ்பூன்
மஞ்சள் தூள்              –   2 ஸ்பூன்
சோம்பு                          –   3 ஸ்பூன்
எண்ணெய்                  –  5 ஸ்பூன்
கடுகு,                             – சிறிது
உளுந்து                        -சிறிது
கறிவேப்பிலை          – தாளிக்க
உப்பு

 செய்முறை :

முதலில் பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும், பூவை பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பூண்டு, மிளகாய், சீரகம், சோம்பு, தேங்காய் துருவலை விழுதாக்கவும்.

அதன் பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்தது நன்கு வதங்கியதும் பூ, பருப்பு கலவை, தேங்காய் விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.