சுவையான முட்டை இடியாப்பம்… செய்து பாருங்கள் …!!!

முட்டை இடியாப்பம் செய்ய தேவையான பொருள்கள் :

முட்டை                                  – 5
இடியாப்பம்                           –  3 கப்
தேங்காய்ப்பால்                   – 2 கப்
சின்ன வெங்காயம்            – 7
காய்ந்த மிளகாய்                – 5
கடுகு, உளுத்தம்பருப்பு  –  அரை  டீஸ்பூன்
கறிவேப்பிலை                   –  2 கப்
எண்ணெய்                           –   5 டீஸ்பூன்
உப்பு                                         –  2 சிட்டிகை

 செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்பத்தைப் போட்டு, தேங்காய்ப்பாலை ஊற்றிப் பிசைந்து அழுத்திவையுங்கள். சிறிது நேரத்தில், தேங்காய்ப்பாலை இடியாப்பம் இழுத்துக்கொண்டு ‘பொலபொல’வென உதிரியாகி விடும்

அதன் பின் முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு போட்டு, நன்கு அடித்துவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள்

பிறகு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு, வெங்காயத்தைக் கொட்டி வதக்குங்கள். ஊறவைத்த இடியாப்பத்தை இதில் கொட்டி, இரண்டு கிளறு கிளறி, அடித்துவைத்த முட்டையை தூக்கி ஊற்றிக் கிளறுங்கள்.

அடுத்து தீயைக் குறைத்துவைத்து, இடியாப்பமும் முட்டையும் நன்கு உதிர் உதிராக வரும்வரை கிளறுங்கள். இதுவரை சுவைத்திருந்த புது ருசியில் இருக்கும் இந்த இடியாப்பம்