சுவையான பூண்டு துவையல் அரைப்பது எப்படி !!!

பூண்டு துவையல்
தேவையான  பொருட்கள் :
பூண்டு – 1 கப்
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிதளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பூண்டு துவையல் க்கான பட முடிவு
செய்முறை:
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய்,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி  அரைத்துக் கொள்ளவேண்டும்.  மற்றொரு  கடாயில்  நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து அரைத்த துவையலில் கொட்டினால் சுவையான பூண்டு துவையல் தயார் !!!