சுவையான பாவ் பாஜி… செய்து பாருங்கள் …!!!

பாவ் பாஜி செய்ய தேவையான பொருள்கள் :

காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குடை மிளகாய், காலிஃப்ளவர், பீட்ரூட் – 1 கப்
உருளை                                               –  3
வெங்காயம்                                       –   2
தக்காளி                                               –    2
இஞ்சி பூண்டு விழுது                   –    2 தேக்கரண்டி
வெண்ணெய்                                    –     4 மேசைக்கரண்டி
பாவ் (பன் )                                         –     5
உப்பு                                                      – தேவையான அளவு
பாவ் பாஜி மசாலா பொடி செய்ய:
பட்டை                                                 – ஒரு அங்குல துண்டு
ஏலக்காய்                                           – 3
கிராம்பு                                                 – 4
சோம்பு                                                 – அரை  தேக்கரண்டி
மராட்டி மொக்கு                              – 2
ஆம்சூர் பொடி                                  –  1 தேக்கரண்டி
சீரகம்                                                   –   1  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்                            –  4
முழு தனியா                                    –   2 தேக்கரண்டி
பெருங்காயம்                                   – சிறிதளவு
மஞ்சள் தூள்                                    – சிறிதளவு

 செய்முறை :

முதலில் காய்கறிகளை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பீட்ரூட் ஒரு பிங்க் நிறத்தை கொடுக்கும். இந்த காய்கறிகளை பயன்படுத்தினாலே போதுமானது. ஆனால் உருளை மட்டும் அவசியம்.

அதன் பின்  பொடி செய்ய தேவையானவையை எடுத்து வைக்கவும். ஆம்சூர் பொடி, பெருங்காயம் தவிர மற்றதை எண்ணெயில்லாமல் வாசம் வரும் வரையில் வறுத்து வைக்க வேண்டும்.

பின்பு ஆற வைத்து பெருங்காயம் மற்றும் ஆம்சூர் பொடி சேர்த்து பொடித்து வைக்கவும். வெண்ணெய் உருக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பிங்க் ஆனதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு இஞ்சி பூண்டு வாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் எல்லா காய்கறிகளையும் சேர்க்கவும். காய்கறிகள் வதங்கியதும் இரண்டு க்ளாஸ் தண்ணீர் சேர்க்கவும்.

அடுத்து காய்கறிகள் ஓரளவுக்கு வெந்து தண்ணீர் சிறிது வற்றியதும் அரைத்து வைத்துள்ள பொடியிலிருந்து 4 மேசைக்கரண்டி பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் தனியாக காய் தனியாக தெரியக் கூடாது. ஒன்றாக குழைந்து வர வேண்டும்.

அடுத்தது தீயை குறைத்து ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும். இப்பொழுது பாவை நடுவில் வெட்டவும். முழுவதுமாக வெட்டக் கூடாது.

பின்னர்  முக்கால் வாசி வெட்டினால் போதுமானது. வெண்ணெய் சேர்த்து ரோஸ்ட் பண்ணி எடுக்கவும். சுவையான பாவ் பாஜி தயார்.