சுவையான கோலா உருண்டை பிரியாணி… செய்து பாருங்கள் …!!!

கோலா உருண்டை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி                                 – 2 கப்
பெரிய வெங்காயம், தக்காளி – தலா ஒன்று
இஞ்சிப்பூண்டு விழுது                  – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய்                              – 2
காய்ந்த வெந்தயக்கீரை             – 3 தேக்கரண்டி (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்)
எண்ணெய்                                         – 3 தேக்கரண்டி
உப்பு                                                       – தேவைக்கேற்ப.
காய்ந்த மிளகாய்                            – 3
உப்பு                                                       – தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள்                          – சிட்டிகை

தாளிக்க:

பெரிய வெங்காயம்                     – ஒன்று (நறுக்கவும்)
சோம்பு                                                – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை                 – சிறிதளவு
கடலைப்பருப்பு                              – ஒரு கப்
எண்ணெய்                                       – பொரிப்பதற்கு தேவையான அளவு.
உளுத்தம்பருப்பு                            – 2 தேக்கரண்டி

செய்முறை :

முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, பின் மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்துக் கலக்கவும்

பின்னர் கலவையை, சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, அதில் உருண்டை களைப் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும் .

பின்பு பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, அரைத்த பட்டை மசாலா பொடி, இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்த பாசுமதி அரிசியையும் சேர்த்து மூன்றரை கப் நீர் விட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

அதனை அடுத்து ஆவி வெளியேறியதும், பொரித்த கோலா உருண்டைகளைச் சேர்த்துக் கலந்துவிட்டால், சுவையான கோலா உருண்டை பிரியாணி தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *