சுவைமிக்க ஸ்பைசியான…பேபிகார்ன் ஃப்ரை ரெசிபி…!!

பேபிகார்ன் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்:

பிஞ்சி மக்காச்சோளம்                  – 6
மைதாமாவு                                       – 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு                                        –  1 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ்                                     – 1 டீஸ்பூன்
இஞ்சிப்பூண்டு பேஸ்ட்                  –  1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்                                 -அரை டீஸ்பூன்
சர்க்கரை                                             –  கால் டீஸ்பூன்
உப்பு                                                      – தேவையான அளவு
எண்ணெய்                                       – தேவையான அளவு

செய்முறை:

மக்காச்சோளத்தை எடுத்து நீளவாக்கில் இரண்டாக வெட்டி கொள்ளவும். அதனுடன் இஞ்சிப்பூண்டு பேஸ்டுடன், மிளகாய் தூள், சோயா சாஸ், கால் டீஸ்பூன் சர்க்கரை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பேஸ்ட் போல  நன்றாக குழப்பிக் கொள்ளவும்.

ஏற்கனவே விரவி வைத்த பேபிகார்ன் கலவையை இட்லி தட்டில் வைத்து அரை வேக்காடாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி மைதா மாவு, 1 தேக்கரண்டி சோள மாவு, 1 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதனுடன் மசாலா தடவிய பேபிகார்னை ஒவ்வொன்றாக எடுத்து மாவு கலவையில் தேய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மற்றும் மொறு மொறுவென  பேபிகார்ன் ஃப்ரை ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *