சுவர் ஏறி குதித்தவருக்கு விருது

நாடு முழுவதும் 71 ஆவது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது இந்த விழாவில் பிரதமர் மோடி, பிரேசில் நாட்டு அதிபர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் வீரதீர செயல்களை செய்து  கடமை தவறாமல் பணியாற்றிவரும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் டெல்லியில் பா சிதம்பரத்தை கைது செய்ய சுவர் ஏறிக் குதித்த சிபிஐ ராமசாமிக்கு நம் குடியரசு தலைவர் சிறந்த காவலர் எனும் விருதை வழங்கியுள்ளார். கண்டிப்புக்கு பெயர் போனவர் என்று அறியப்படும் தமிழகத்தைச் சேர்ந்தராமசாமி சிதம்பரத்தை மட்டுமல்லாது சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *