உதகை, கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு இ பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, இ பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் எண்ணிக்கையை கண்காணித்து உண்மையான புள்ளி விவரங்களை சேகரிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.