திருச்சி மாவட்டம் எட்டமலை பட்டிப்புதூர் பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் 15 மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள் தன் பெற்றோரிடம் சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் உறவினர்கள் சிலர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்று விட்டு அந்த புகைப்படங்களை செல்போனில் அனுப்பியுள்ளனர். இதை பார்த்த சிறுமிகளும் தங்களையும் வேளாங்கண்ணிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் பெற்றோர் அழைத்து செல்வதாக கூறிவிட்டு காலம் தாழ்த்தி வந்ததால் கோபத்தில் சிறுமிகள் சென்னைக்கு பேருந்தில் சென்றுள்ளனர். இதற்கிடையில் தங்கள் மகள்களை காணாததால் பெற்றோர் எட்டமலை பட்டிபுதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமிகளை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமிகள் அனைவரும் சென்னை மெரினா கடற்கரையில் சுற்றித்திருவதை காவல்துறையினர் கண்டனர். இவர்களை பத்திரமாக மீட்டு திருச்சிக்கு அழைத்து வந்த நிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.