சுருக்குமடி வலையை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழநாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய முறை மீனவர்கள் நலன் கருதியும் சுருக்குமடி வலைக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்தது.

சில மாநிலங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள சுருக்குமடி வலைக்கு தமிழகத்தில் மட்டும் தடை விதித்திருப்பது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்கு கடல் வளம், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே தடைவிதிக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.