சும்மா வந்துட்டு இருந்தவர இப்படி பண்ணிட்டாங்க…. ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கைது…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் கூலித் தொழிலாளியை தாக்கிய வழக்கில் அண்ணனையும், தம்பியையும காவல்துறையினர் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மானூரில் கூலித் தொழிலாளியான ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குத்தாலகுமார் என்பவருக்கும் இடையே கடந்த 1 வருடத்திற்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த குத்தால குமாரும் அவரது தம்பியும் ஹரிஹரனை தாக்கியதோடு மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கியுள்ளார்கள். இதனால் ஹரிஹரன் குத்தாலகுமார் மீது மானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குத்தாலகுமாரையும், அவரது தம்பியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.