சும்மா போறவருக்கு இப்படியா நடக்கணும்…. கூலித் தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….

நெல்லையில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் கூலித் தொழிலாளியான முத்துக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய முத்துக்குமாரின் மோட்டார் சைக்கிள் சற்றும் எதிர்பாராதவிதமாக சாலையோரத்திலிருந்து மின்கம்பத்தில் பலமாக மோதியது.

இதனால் படுகாயம் அடைந்த முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.